பட்டு நெசவாளருக்கான தேசிய விருது: காஞ்சிபுரம் பெண்கள் தேர்வு

சிறந்த கைத்தறி பட்டு நெசவாளர்களுக்கான விருதுகளுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், முருகன், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ள
சிறந்த கைத்தறிக்கு தேசிய விருது பெற்ற காஞ்சி பட்டு நெசவாளர் மகேஸ்வரி. (வலது) தேசிய நற்சான்றிதழ் விருது பெற்ற பட்டு நெசவாளர் பார்வதி.
சிறந்த கைத்தறிக்கு தேசிய விருது பெற்ற காஞ்சி பட்டு நெசவாளர் மகேஸ்வரி. (வலது) தேசிய நற்சான்றிதழ் விருது பெற்ற பட்டு நெசவாளர் பார்வதி.

சிறந்த கைத்தறி பட்டு நெசவாளர்களுக்கான விருதுகளுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், முருகன், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேசிய கைத்தறி நாளில் நெசவாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு தேசிய விருது வழங்கி, மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன்படி, கடந்த 2016-க்கான சிறந்த கைத்தறி பட்டு நெசவாளருக்கான விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சிறந்த கைத்தறி நெசவாளருக்கான விருதுக்கு, காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மகேஸ்வரி (60) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல், அதே சங்கத்தைச் சேர்ந்த பார்வதிக்கு (46) சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருது (கமலாதேவி-சத்தோபதாயாய்) வழங்கப்படவுள்ளது. தனியார் நெசவாளர் விருதுக்கு வரதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
அதுபோல், சிறந்த கைத்தறி துணி விற்பனைக்கான (வர்த்தகம்) தேசிய நற்சான்று விருது காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதன்முறையாக கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருதுக்கு அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விருதுகள் வழங்கப்படும் இடம், 2017-க்கான விருதுகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவ்விருதுகளை வழங்கப்படவுள்ள குடியரசுத் தலைவர், தேர்வு செய்யப்பட்ட சிறந்த கைத்தறி நெசவாளர் தேசிய விருதுக்கு ரூ. 1.5 லட்சமும், வடிவமைப்பு, வர்த்தகம், விற்பனை ஆகிய விருதுகளுக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படவுள்ளது. 
இதுகுறித்து தேசிய விருதுக்கு தேர்வான மகேஸ்வரி கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஈவ்னிங்-மார்னிங் எனும் ரகத்தில் கோர்வை அமைப்பு பயன்படுத்தி நெய்யப்பட்ட பட்டுப் புடவைக்கு விருது கிடைத்துள்ளது. அதிக வேலைப்பாடு கொண்ட இந்த ரக புடவையை நெய்வதற்கு சுமார் 35 நாள்களுக்கு மேல் ஆனது. இது மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. வடிவமைப்பு அளித்த முருகன் கூட்டுறவு சங்கத்துக்கும், நெய்வதற்கு உதவியாய் இருந்த குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com