மனசாட்சியோடு எழுதுங்கள்: செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கணபதி விடுத்த கோரிக்கை 

கொஞ்சம் மனசாட்சியோடு செய்திகளை பதிவு செய்யுமாறு லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனசாட்சியோடு எழுதுங்கள்: செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கணபதி விடுத்த கோரிக்கை 

கோவை: கொஞ்சம் மனசாட்சியோடு செய்திகளை பதிவு செய்யுமாறு லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இதனைக் கூறினார்.

துணைவேந்தர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கணபதியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விசாரணைக்கு ஆஜராக, சிறையில் இருந்து கணபதியை காவல்துறையினர் கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, செய்தியாளர்களை பார்த்து ஆவேசமாகப் பேசிய கணபதி, கொஞ்சம் மனசாட்சியோடு எழுதுங்கள். மனிதத் தன்மையுடன் எழுதுங்கள். எதை வேண்டுமனாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள். நானும் ஒரு மனிதன்தான் என்று கூறினார்.

மேலும், விசாரணையின் போது நீதிபதி முன்னிலையில் கணபதி கூறியதாவது, ஊடகங்களில் வெளியான செய்திகளால், ஒரு மூத்த குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகனுக்குக் கிடைக்கும் சலுகை மட்டுமல்லாமல், முதல் வகுப்பு அறையும் மறுக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் வரை, வயதானவன் என்பதை கருத்தில் கொண்டு சுடுநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

அவரது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு சிறைத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com