சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேர் எரிந்து நாசம்

வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேர் எரிந்து நாசமானது தொடர்பாக ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் தீயில் எரிந்து சேதமடைந்த சாலை கெங்கையம்மன் கோயில் தேர்கள்.
வேலூர் சத்துவாச்சாரியில் தீயில் எரிந்து சேதமடைந்த சாலை கெங்கையம்மன் கோயில் தேர்கள்.

வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில் தேர் எரிந்து நாசமானது தொடர்பாக ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடித் திருவிழா, சிரசு திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். இக்கோயிலுக்குச் சொந்தமான 2 தேர்கள் கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. அவ்வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கும், சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். தேர் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் மது அருந்துவதாகவும், அவர்களில் எவரேனும் தீ வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சத்துவாச்சாரி போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com