தொலைநிலைக் கல்வி எம்பிஏ பட்டச் சான்றிதழ் தயார்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வெழுதி எம்.பி.ஏ. முடித்த மாணவர்களுக்கான பட்டச் சான்றிதழ் தயாராக இருப்பதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வெழுதி எம்.பி.ஏ. முடித்த மாணவர்களுக்கான பட்டச் சான்றிதழ் தயாராக இருப்பதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டச் சான்றிதழ் பெறும் மாணவர் பட்டியல் சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. 
இந்தச் சான்றிதழைப் பெற விரும்பும் மாணவர்கள் படிப்பை முடித்ததற்கானச் சான்றிதழ் நகல், பட்டச் சான்றிதழ் கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி, மாணவர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com