மூதாட்டியை தரையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்த 2 பணியாளர்கள் நீக்கம்

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக வந்த மூதாட்டியை தரையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்து பணியில் மெத்தனமாகச் செயல்பட்டதாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 2

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக வந்த மூதாட்டியை தரையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்து பணியில் மெத்தனமாகச் செயல்பட்டதாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 114 இல் உள்ள சேவை மையத்தில் வியாழக்கிழமை பகல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அலுவலகத்துக்கு காப்பீட்டு அட்டை பெற வந்த அலமேலு (75) என்ற மூதாட்டியை தரையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. 
மேலும் இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் இருந்த அந்த மூதாட்டியைக் கொண்டு செல்ல ஸ்டெரச்சர் போன்ற படுக்கை வசதி இல்லாததால், உறவினர்கள் அவரை போர்வையால் மூடி தூக்கி வந்தனர்.
மேலும் மூதாட்டிக்கு போதிய அடிப்படை வசதி செய்து தராமல் ஒப்பந்தப் பணியாளர்கள் தேன்மொழி, திவாகரன் ஆகியோர் செயல்பட்டதாகப் புகார் எழுந்தது. 
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்தியுள்ள தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். 
இதன் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு, ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் மெத்தனமாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 
இது குறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை, எளியோர் உள்பட ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். 
எனவே, இப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பணியாளர்கள் செயல்பட தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப் பணியைத் தொடர்ந்து கண்காணிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com