இயற்கை விவசாயத்தில் அசத்தும் புதுவை இளைஞர்கள்!

புதுவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, அதிக மகசூல் ஈட்டி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். 
இயற்கை விவசாயத்தில் அசத்தும் புதுவை இளைஞர்கள்!

புதுவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, அதிக மகசூல் ஈட்டி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

இன்றைய சூழலில் இயற்கை விவசாய முறை, பாரம்பரிய நெல் சாகுபடி போன்றவை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த முறையைக் கையாண்டு, அதில் ஆச்சரியம் தரும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார் புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வீரப்பன் (35).

மின்னணு தொடர்பியலில் டிப்ளமோ படித்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வரும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை உரமாக மாற்றி, இயற்கை விவசாய முறையில் காட்டுயானம், சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, இலுப்பம்பூ சம்பா, பாசுமதி, ராஜபோகம், துளசி வாசனை சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சேலம் சன்னா ஆகிய 9 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

இவர் நிலத்தில் பயிரிட்டுள்ள நெல் எந்த ரகம், அதற்கான காலம், நெல் அளவு, நெல் நிறம், விதை அளவு, விதைப்பு தேதி, அறுவடை தேதி, பயன்படுத்தும் உரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஆங்காங்கே பெயர்ப்பலகை வைத்து, கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமும் அளித்து வருகிறார்.

இயற்கை விவசாய முறை சாகுபடிக்காக இவருக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்படும் பங்கேற்பாளர் உத்தரவாத சான்றிதழும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வீரப்பன் கூறியதாவது: ஒவ்வொரு பாரம்பரிய நெல்லுக்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. எனவே, எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருதி இப்போதே இயற்கை விவசாய முறைக்கு அனைவரும் மாற வேண்டியது மிகவும் அவசியம். அதில் அதிக மகசூலையும் எளிதில் ஈட்ட முடியும் என்றார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (34) என்பவரும் தென்னை மற்றும் வாழை போன்ற பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com