சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.
சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் பரத நாட்டியமாடிய ஹூப்ளி சுஜாதா நாட்டியப் பள்ளி  மாணவிகள்
சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் பரத நாட்டியமாடிய ஹூப்ளி சுஜாதா நாட்டியப் பள்ளி  மாணவிகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. தொடர்ந்து 17-ஆம் தேதி வரை 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு டி.சுப்பிரமணிய தீட்சிதர் தலைமை வகித்தார். சிவநெறி தி.பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பத்மா சுப்பிரமணியன், ஜெயப்பிரியா விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 
தொடக்க விழாவை அடுத்து டாக்டர் பத்மா சுப்பிரமணியன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டியாஞ்சலி மாலை 4 மணிக்குத் தொடங்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. 
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் சார்பில்...
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், தெற்கு வீதி வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் 37-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது. 
தொடர்ந்து 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமை வகித்தார். 
செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என்.காமகோடி தொடக்கி வைத்துப் பேசினார். 
நாட்டியாஞ்சலியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடுகின்றனர். 
தினமும் மாலை 6 மணி முதல் தொடங்கி இரவு 10 மணி வரை நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
நாட்டியமாடிய கலைஞர்கள்: 
புதுதில்லி கிருஷ்ணமூர்த்தி குழுவினர், ஹூப்ளி சுஜாதா நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகள், சென்னை கவிதா ராமு ஆகியோரின் பரதம், சென்னை மீரா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் குமார சம்பவம் நாட்டிய நாடகம், புணே நாத்ரூப் நாட்டியப் பள்ளி மாணவிகளின் கதக் நடனம், யுஎஸ்ஏ சலங்கை நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், ஹைதராபாத் டாக்டர் விஜயபால் பாத்லோத் குழுவினர் குச்சுப்புடி நடனம், புதுதில்லி கருர்காம் சுனர்தகி நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், பெங்களூரு அபூர்வா பிரதீப் பரதம், சென்னை சரஸ்வதி நாட்டியாலயா சப்த தாண்டவம், மந்திர் நாட்டியகலா கருகுலா மாணவிகளின் மோக்க்ஷம் நடனம் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com