விபத்தில் வாய், முகம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 சதவீதம் உயர்வு

விபத்தில் வாய், முகம் பாதிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 சதவீதம் உயர்ந்து வருவதாக வாய், முகச் சீரமைப்புத் துறை அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.ராம்குமார் கூறினார்.
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் வாய், முகச்சீரமைப்புத் துறை அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.ராம்குமார்.

வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக வாய், முகச் சீரமைப்பு மருத்துவர்கள் தினவிழாவில் அவர் பேசியது:
இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 5.40 லட்சம் பேரில் 1.81 லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 9 ஆயிரத்து 387 பேர் வாய், முகம், தாடை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 
விபத்துக் காரணமாக வாய், முகம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருகின்றது. வாய், முகத்தைச் சீரமைக்கும் மருத்துவத் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. 
நெற்றி, கன்னம், தாடை, வாய், மூக்கு, உதடு, பல்வரிசையில் இருந்த குறைபாடுகளைத் தொழில்நுட்பம் மூலம் நீக்கி நீண்ட காலமாகத் தவித்துக் கொண்டு இருந்த இளம்பெண்களுக்கு திருமணம் நிகழ உறுதுணை புரிந்துள்ளோம்.
தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வாய், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவினால் பலருக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
முகச் சீரமைப்பு மருத்துவப் பேராசிரியர் எம்.செந்தில் முருகன் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய முகச்சீரமைப்பு அறுவை மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும் என்றார்.
தாகூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன், துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன்,துறைத் தலைவர் ஜிம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com