திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அம்மா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும். வளர்ந்த மாநிலம் எனக்கூறி தமிழகத்துக்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது.

தமிழக அரசின் சுகாதார காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது. ஜெயலலிதா பிறந்த நாளான்று நலத்திட்ட உதவிகளை வழங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

பிறந்தநாளன்கு ஏழைகளுக்கு உதவுமாறு ஆலோசனை வழங்கியவர் ஜெயலலிதா. டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் அதிமுகவுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com