திருச்சி அருகே ஜல்லிக்கட்டு; 650 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பார் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 650-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கூத்தைப்பார் கிராம ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் இளைஞர்.
கூத்தைப்பார் கிராம ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் இளைஞர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பார் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 650-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இங்கு மகாசிவராத்திரியின் மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி நிகழாண்டு நடந்த ஜல்லிக்கட்டை, கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு தொடக்கி வைத்தார். காளைகளை திருச்சி மண்டலக் கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினரும், மாடுபிடி வீரர்களை திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் குழுவினரும் பரிசோதனை செய்தனர். காயமடையும் வீரர்கள், பொதுமக்களுக்கு முதற்கட்ட சிசிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ்களும் தயாராக இருந்தன.
முதலில் முனியாண்டவர் கோயில் காளையும், தொடர்ந்து கூத்தைப்பார் கிராம பரிவார தெய்வ காளைகளும் பின்னர் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 650-க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். டிஐஜி பவானீஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.சி. கல்யாண் ஆகியோரது மேற்பார்வையில் திருவெறும்பூர், துவாக்குடி போலீஸார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com