திருப்பரங்குன்றம் கோயில் கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அனைத்துக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு சாதனங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் கோயில் கடைகளில் தீத்தடுப்பு சாதனங்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அனைத்துக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு சாதனங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் கடந்த பிப். 2 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து போயின. இதில் கோயில் மண்டபங்களும் சேதமாகின.

இதன் எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில்  உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் நீதிமன்றம் உடனடியாக கடைகளை காலிசெய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலிசெய்யப்பட்டன.

மேலும் கோயில்களில் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகங்களிலும் உள்ள கடைகளை காலி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுமார் 27 கடைகள் உள்ளன. அங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அணைக்கும் விதத்தில் அனைத்து கடைகளிலும் கடைக்கு ஒன்று வீதம் 27 கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு சாதனம் வாங்கி  வைத்துள்ளனர். 

இதுகுறித்து கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ள சுப்பிரமணியன் கூறியது: 
மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து அனைவரின் மனதையும் மிகவும் பாதித்துள்ளது. அதே சமயத்தில் இந்த கடைகளை வைத்துதான் பல குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்து நாங்கள் தொடர்ந்து கடைகள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com