புதுச்சேரி தெருவோரக் கடையில் டீ குடித்த அமெரிக்க தூதர்!

புதுச்சேரிக்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் அங்குள்ள தெருவோர டீ கடையில் டீ ஆற்றி குடித்து மகிழ்ந்தார்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள டீ கடையில் டீ ஆற்றி பிறகு அதனை அருந்திய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னீத் ஐ ஜஸ்டர்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள டீ கடையில் டீ ஆற்றி பிறகு அதனை அருந்திய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னீத் ஐ ஜஸ்டர்.

புதுச்சேரிக்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் அங்குள்ள தெருவோர டீ கடையில் டீ ஆற்றி குடித்து மகிழ்ந்தார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டர் அண்மையில் நியமிக்கப்பட்டார். 
அவர் அரசுமுறைப் பயணமாக புதுச்சேரிக்கு புதன்கிழமை காலை வந்தார். புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை ஆளுநர் மாளிகையிலும், முதல்வர் வே.நாராயணசாமியை சட்டப்பேரவை அலுவலகத்திலும் கென்னத் ஜஸ்டர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை, அங்குள்ள காந்தி திடல், பாரதி பூங்கா, கப்ஸ் தேவாலயம், மணக்குள விநாயகர் கோயில், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது, பாரதி பூங்காவில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட பெண்களுடன் சுயபடம் (செல்பி) எடுத்துக் கொண்டார். 
பின்னர், ரயில் நிலையம் எதிரில் உள்ள டீ கடையைப் பார்த்தவுடன் அங்கு டீ குடிக்க விரும்பினார். இதை உடன் வந்த அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், பாய்லரில் போடப்படும் டீ தான் வேண்டும் என்றும் கூறினார். 
இதையடுத்து, அதிகாரிகள் பாய்லர் வைத்து டீ போடும் கடைக்கு அமெரிக்கத் தூதரை அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன் டீ ஆற்றுபவரைப் பார்த்து, தானும் அதுபோல டீ ஆற்ற வேண்டும் என்று தனது ஆசையைக் கூறினார். 
உடனே டீ ஆற்றுபவரும் தனது குவளையை அமெரிக்கத் தூதரிடம் கொடுத்தார். அதை வாங்கிய அமெரிக்கத் தூதர் டீ ஆற்றி கொடுத்து மகிழ்ந்தார். 
மேலும், அதே கடையில் டீ குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தெருவோரக் கடையில் அமெரிக்கத் தூதர் டீ குடித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com