நடிகர் கமல்ஹாசனின் 21-ந் தேதி அரசியல் பயண விவரம் வெளியீடு

வருகிற 21-ந் தேதி நடைபெறும் அரசியல் பயண திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை வெளியிட்டார்.
நடிகர் கமல்ஹாசனின் 21-ந் தேதி அரசியல் பயண விவரம் வெளியீடு

முழு நேரம் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன், வருகிற 21-ந் தேதி அதை தொடங்கவுள்ளதாக கூறினார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். குறிப்பாக கேரள முதல்வர் உமன் சாண்டி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனுடன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் சனிக்கிழமை காலை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தார்.

இந்நிலையில், வருகிற 21-ந் தேதி அன்று தனது அரசியல் பயணதிட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

காலை 7.45 மணி - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகை. 

காலை 8.15 மணி - அப்துல் கலாம் பள்ளிக்கு நேரில் சென்று பார்வை.

காலை 8.50 மணி - கணேஷ் மஹாலில் மீனவர்களுடனான சந்திப்பு. 

காலை 11.10 மணி - அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகை.

காலை 11.20 மணி - மதுரைக்கு புறப்பாடு.

நண்பகல் 12.30 மணி - ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயில் அருகில் பொதுக்கூட்டம்.

பிற்பகல் 2.30 மணி - பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு முன்பு பொதுக்கூட்டம்.

பிற்பகல் 3 மணிய - மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்.

மாலை 5 மணி - மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை.

பின்னர் 6 மணி - அரசியல் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்.

மாலை 6.30 மணி - பொதுக்கூட்டம் நடக்கிறது. 

இரவி 8.10 முதல் 9 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com