சென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் குறைகிறது

சென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் மார்ச் மாதம் முதல் 20 நிமிடம் அளவுக்குக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் குறைகிறது


சென்னை: சென்னை - மதுரை இடையேயான ரயில் பயண நேரம் மார்ச் மாதம் முதல் 20 நிமிடம் அளவுக்குக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் முதல் மதுரை வரையிலான 495 கி.மீ. தூர ரயில் இரட்டைப் பாதை முழுவதும் மின்வசதி செய்யப்பட்டதாக மாறவிருப்பதை அடுத்து பயண நேரத்தில் 20 நிமிடம் அளவுக்குக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி - திண்டுக்கல் இடையே இருக்கும் தாமரைப்பாடி மற்றும் கல்பாதிசத்திரம் இடையேயான 25 கி.மீ. இருப்புப் பாதையை மின்மயமாக்கும் இறுதிகட்டப் பணி சமீபத்தில் நிறைவடைந்து, அப்பாதையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த இருப்புப் பாதையில் வரும் 26ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்து விரைவில் இந்த இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று மூத்த ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

தற்போது இந்த வழித்தடத்தில் ஒற்றை இருப்புப் பாதை இருப்பதால் ரயில்கள் சிக்னலுக்காக 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. புதிய இரட்டை இருப்புப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டால் இந்த கால தாமதம் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com