காவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின்

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று திமுக
காவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின்

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ள நடிகர் கமல்ஹாசன், திமுக தலைவர் கருணாநிதியை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக அவரை கோபாலபுரம் இல்லத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்தப் பேட்டி:
புதிய அரசியல் கட்சித் தொடங்கும் நடிகர் கமல், கட்சித் தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். நானும் அவருக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்தேன். 
அதுமட்டுமல்ல, காவிரிப் பிரச்னையை மையமாக வைத்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக சார்பில் அதிமுக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சியை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, திங்கள்கிழமை வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, சட்டப் பேரவை எதிர்க் கட்சி என்ற பொறுப்பின் அடிப்படையில் திமுக சார்பிலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு ஆளும் அதிமுகவுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவின் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கமலுக்கும் அழைப்பு: புதிதாக அரசியல் கட்சித் தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசனுக்கும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலில் நிலைத்து நின்று மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பை அவர்கள் பெறவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com