ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! 

ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு! 

சென்னை: ஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் பழைமையான ராமர் கோயில் உள்ளது. ஆந்திர அரசுக்கு சொந்தமான இந்த கோயில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. கோயிலுக்கு எதிரில் வனப் பகுதியை ஒட்டிய இடத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் 5 பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மிதிப்பதை கண்ட பொது மக்கள் அதுகுறித்து கடப்பா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஏரியில் மேலும்  சடலங்கள் உள்ளதா என நீச்சல் வீரர்களின் உதவியுடன் அவற்றை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். 

அந்த ஏரியின் கரையில் கிடந்த துணிப்பை ஒன்றில் சேலம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார்  சந்தேகிக்கித்தனர். சனிக்கிழமை இரவு வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சிலர் சென்றனர் என்றும் அவர்களைப் பிடிக்க போலீஸார் விரட்டி சென்றபோது தப்புவதற்காக  ஏரியில் குதித்திருக்கலாம் என்றும் நீச்சல் தெரியாமல் அவர்கள் நீரில் மூழ்கி அவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  

மேலும் செம்மரம் வெட்டச் சென்றவர்களை பிடித்த ஆந்திர போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதில் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும், இதனை மறைக்க சடலங்களை போலீஸார் ஏரியில் வீசினார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

பின்னர் நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்தவர்களின் சட்டைப் பையில் இருந்த துண்டுச் சீட்டு, அவர்கள் வைத்திருந்த மஞ்சள் பை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 

உயிரிழந்தவர்கள் குறித்த முழு விவரம் தெரிந்தால் மட்டுமே பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதை அறிந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பலர், இறந்தவர்களை அடையாளம் காண கடப்பா ரிம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை வந்தனர்.

இதில் இறந்தவர்கள் பற்றிய அடையாளம் தெரிய வந்தது. அதன்படி அவர்கள் 5 பேரும் சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த முருகேசன் (42), ஜெயராஜ் (25), மற்றொரு முருகேசன் (42), கருப்பண்ணன் (23), சின்னப்பையன் (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சடலங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஐவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கடப்பா மருத்துவமனையில் உண்மையினை மறைக்க அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்ய்ய்யப்பட்டுள்ளதால், மறு பிரேதப் பரிசோதனை செய்யய உத்தரவிடக் கோரி, புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தற்பொழுது ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுதாரர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தினை அணுகலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com