'குளங்களைக் காணவில்லை'- திருவண்ணாமலை ஆட்சியர் பகீர் தகவல்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட குளங்களைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
'குளங்களைக் காணவில்லை'- திருவண்ணாமலை ஆட்சியர் பகீர் தகவல்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானதாகும். அதுமட்டுமல்லாமல் ரமணர் ஆசிரமம் உள்ளிட்ட சித்தர்களின் ஆசிரமங்களும் அமைந்துள்ளன. 

14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப்பாதையில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் ஈசான்ய லிங்கம் அமைந்துள்ள பகுதியில் யாத்ரீக நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 123 அறைகளைக் கொண்ட இங்கு 430 பேர் வரை தங்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ரூ.65 கோடி செலவில் கிரிவலப்பாதையை மறுசீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிலையில், 100-க்கும் மேற்பட்ட குளங்களைக் காணவில்லை என்ற பகீர் தகவலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கிரிவலப்பாதையைச் சுற்றி மொத்தம் 360 குளங்கள் இருக்க வேண்டும். ஆனால் அதில் 100க்கும் மேற்பட்டவை காணவில்லை. வருவாய் துறையினருடன் இணைந்து மாயமான குளங்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்தில் நடைபெறும் என்று உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com