ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் பெருமிதம்

இந்திய அளவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.
ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் பெருமிதம்

இந்திய அளவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 34 -ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
முப்பதிற்கும் மேற்பட்ட அறிவுத் துறைகளை யுனெஸ்கோ நிறுவனம் வரையறை செய்துள்ளது. அவற்றில் பல துறைகளில் தமிழகம் முதலிடம் பெறுகிறது. 
18-23 வயதுக்குள்பட்ட மாணவர்களில் உயர் கல்வியில் சேர்ந்து பயில்வோரின் எண்ணிக்கை இந்திய அளவில் 25.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 46.9 சதவீதத்தை எட்டி முதன்மை நிலையைப் பெற்றுள்ளது. இதே பிரிவில் மாணவிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 24.5 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 45.6 சதவீதமாக உள்ளது. உயர்கல்வித் துறையின் புதுமையான செயல்பாடுகளால் தமிழக உயர்கல்வி உயர்வான நிலையை அடைந்துள்ளது. இந்திய அளவில் ஆராய்ச்சிப் படிப்புகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அன்பழகன்.
போலியாக தங்கப்பதக்கம் பெற முயன்ற மாணவி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஒத்திகை செவ்வாய்க்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பல்கலைக்கழகப் பதிவாளர் ஜி. கோபிநாத்துக்கு செல்லிடப்பேசியில் ஒரு தகவல் கிடைத்தது. அதில், 'பட்டமளிப்பு விழாவில் சிதம்பரத்தைச் சேர்ந்த சோ. ராஜகுமாரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முழு நேரப் பணியாளராகப் பணியாற்றி வரும்போது, எப்படி திருவையாறு சம்ஸ்கிருத மற்றும் தமிழ்கல்விக் கல்லூரியில் மாணவியாகப் பயின்றதாக காண்பித்து, அவர் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகப் பணியாளர் எப்படி கல்லூரி மாணவியாக இருக்க முடியும், எனவே அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கக் கூடாது' எனக் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. மணிசங்கரும், பதிவாளர் கோபிநாத் கணபதியும் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ராஜகுமாரியை அழைத்து விசாரித்த போது, அது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com