புதுவை எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது தவறல்ல

புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது சட்டப்படி தவறல்ல என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது தவறல்ல

புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டை ஆதாயப் பதவி வகிப்பது சட்டப்படி தவறல்ல என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், திமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் என 7 பேர் வாரியத் தலைவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எம்எல்ஏ, வாரியத் தலைவர் என இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவியை இவர்கள் வகிப்பதால், புதுதில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது போல, இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, அதிமுக வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் புதுவை அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, புதுவையில் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிக்கும் வாரியத் தலைவர்கள் லட்சக்கணக்கில் அரசுப் பணத்தை செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனால், இரட்டைப் பதவி குறித்த சர்ச்சை புதுவையில் மீண்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் வே.நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டபோது அவர் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பது சட்டப்படி தவறில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்ட சட்டம் ஏற்கெனவே மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பதில் தவறில்லை.
வாரியத் தலைவர்கள் விதிகளுக்கு உள்பட்டுத்தான் செலவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் இரட்டைப் பதவி வகிப்பது தொடர்பாக தேவையற்ற சர்ச்சையை சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com