மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து

கும்பகோணம் அருகே அமைந்துள்ள கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து

கும்பகோணம் அருகே சத்திரம் என்ற பகுதியில் அமைந்துள்லது கருப்பூர் என்ற கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

மிகவும் பழமையான இக்கோயிலில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கருவறையில் நடந்த இந்த தீ விபத்தில் பூஜை உள்ளிட்ட அலங்காரப்பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. 

இந்நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அடுத்தடுத்து சிவ ஆலயங்களில் இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் சமீபகாலங்களில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீர வசந்த ராயர் மண்டபம் முழுவதும் இந்த தீ விபத்தில் சேதமடைந்தது. அதில் செயல்பட்டு வந்த 30 கடைகள் எரிந்து நாசமாகியன. இதை தொடர்ந்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடித்து எரிந்தது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com