சகோதரி நிவேதிதை வழியில் நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சகோதரி நிவேதிதை காட்டிய வழியில் செயல்பட்டு நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை வழங்கினார்.
சகோதரி நிவேதிதை 150- ஆவது பிறந்தநாள் ரத யாத்திரை நிறைவு விழாவில் கெளரவிக்கப்பட்டவர்களுடன் (இடமிருந்து) மாநில விழாக்குழுவைச் சேர்ந்த கே.எஸ்.பபாய், சி.ஏ.வாசுகி, யதீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியாம்பா,
சகோதரி நிவேதிதை 150- ஆவது பிறந்தநாள் ரத யாத்திரை நிறைவு விழாவில் கெளரவிக்கப்பட்டவர்களுடன் (இடமிருந்து) மாநில விழாக்குழுவைச் சேர்ந்த கே.எஸ்.பபாய், சி.ஏ.வாசுகி, யதீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியாம்பா,

சகோதரி நிவேதிதை காட்டிய வழியில் செயல்பட்டு நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை வழங்கினார்.
சகோதரி நிவேதிதைவின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ரத யாத்திரையின் நிறைவு விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்துப் பேசியது:
சகோதரி நிவேதிதை அயர்லாந்தில் கண்ணியமான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவில் டார்ஜிலிங்கில் 1911-ஆம் ஆண்டு மறைந்தார். அவரது 47 ஆண்டு கால வாழ்க்கையை இந்தியாவின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். நோபால் பரிசுபெற்ற அன்னை தெரசாவுக்கும், அரவிந்தர் ஆசிரம அன்னையான மீராவுக்கும் முன்னோடியாக சகோதரி நிவேதிதை விளங்கினார். இவர் இந்தியாவின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
மகாகவி பாரதியாருக்கும் குருவாக சகோதரி நிவேதிதை விளங்கினார். இவர் பெண்களுக்கென்றே தனியாக பள்ளி தொடங்கினார். இந்திய கலாசாரத்தின்படி கல்வி அளித்தார். இந்திய நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவர் காட்டிய வழியில் மாணவர்கள் செயல்பட்டு நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும். 
இந்த ரத யாத்திரை கோவையில் ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 27 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இந்த ரதயாத்திரை சென்றது. 3 லட்சம் பேர் பார்வையிட்டனர். சுவாமி விவேகாந்தர், 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். அவர்களை வைத்து இந்தியாவை மாற்றுவேன் என்றார். இந்த ரத யாத்திரை மூலமாக இப்போது 3 லட்சம் பேர் கிடைத்துள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு இவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் ஆளுநர் சுவாமி கெளதமானந்தர்: நிகழ்ச்சியில், உலகளாவிய ராமகிருஷ்ண மடம் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தர் பேசியது:
பல்வேறு தடைகளை தாண்டி எல்லா பணிகளையும் சிறப்பாக முடித்தவர் நிவேதிதா. அவரிடம் இறை சக்தி இருந்தது. வாழ்க்கையில் தூய்மை, உண்மை, தியாகம், நல்லொழுக்கம் ஆகிய சக்திகள் இருந்தன. அதைதான் நாம் பின்பற்ற வேண்டும் என்றார் சுவாமி கௌதமானந்தர். 
ஸ்ரீ சாரதா ஆசிரமத் தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியாம்பா, வழக்குரைஞர் வானதி சீனிவாசன், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இராமகிருஷ்ணா மடம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com