ஜெயலலிதாவின் உருவச்சிலையில் மாற்றங்கள் செய்யப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு 

ஜெயலலிதாவின் உருவச்சிலையில் மாற்றங்கள் செய்யப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு 
ஜெயலலிதாவின் உருவச்சிலையில் மாற்றங்கள் செய்யப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு 

சென்னை: சமூகவலைதளங்களில் வரும் கருத்தை ஏற்று அதிமுக தலைமையத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் நேற்று என்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலையை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். ஆனால், நேற்று காலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டதில் இருந்து, சிலையில் இருப்பது ஜெயலலிதா போலவே இல்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. பலரும் ஒரு சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களின் ஜாடையில் இருப்பதாக விமர்சனம் செய்து இருந்தார்கள். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவச்சிலையை, சமூகவலைதளங்களில் வரும் கருத்தை ஏற்று சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார். 

திருச்சியில் வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி புதிய கட்சி தொடங்கி உள்ள கமல் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏப்ரல் மாதமே முட்டாள்கள் மாதமாகும். எனவே அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com