நடிகை ஸ்ரீதேவி காலமானார்

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நடிகை ஸ்ரீதேவி காலமானார்


நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தனது கணவர் போனி கபூர் மகள் குஷி ஆகியோருடன் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி(54) தமிழகத்தில் உள்ள சிவகாசியில் 1963 ம் ஆண்டு பிறந்தார்.
இவர் தமிழ் திரையுலகில் 1967ல் வெளிவந்த துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின் இவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன்  இணைந்து 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம் உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக  நடித்த திரைப்படம் 2015 ம் ஆண்டி வெளிவந்த புலி திரைப்படம் ஆகும்.
மேலும் இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருது :
கலைத்துறையில் இவரின் பணியை பாராட்டி மத்திய அரசு இவருக்கு  2014 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

மேலும் இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதினையும், தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றுள்ளார்.

இரங்கல்:
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com