தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரே ஆசிரியரே அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கும் நிலையில், 800-க்கும் மேற்பட்ட 'ஓராசிரியர் பள்ளிகள்' செயல்படும் அதிர்ச்சித் தகவல். .
தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரே ஆசிரியரே அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கும் நிலையில், 800-க்கும் மேற்பட்ட 'ஓராசிரியர் பள்ளிகள்' செயல்படும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.       

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் குழு ஒன்று விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிய வந்துள்ள தகவல்களாவன:

தமிழகத்தில் சுமார் 820 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் அந்த ஆசிரியரே கற்றுக்கொடுக்கிறார்.

இதேபோல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிகளில் 37 சதவிதிகத்திற்கும் அதிகமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை, ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்பறை இருக்க வேண்டும், ஆனால் அறிவியல் பாடத்திற்கு 57 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலேயே தற்போது இருகின்றனர்.

இத்தகைய விபரங்கள் மத்தியக் குழு ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com