ஆவடியில் நாளை தேசிய தொழில் கண்காட்சி தொடக்கம்

ஆவடியில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ( ஜன. 4 , 5) கனரக தொழிற்சாலை பகுதியில் உள்ள வள்ளுவர் வாசுகி திருமண மண்டபத்தில் தேசிய அளவிலான வர்த்தக மேம்பாட்டு

ஆவடியில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ( ஜன. 4 , 5) கனரக தொழிற்சாலை பகுதியில் உள்ள வள்ளுவர் வாசுகி திருமண மண்டபத்தில் தேசிய அளவிலான வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சி மற்றும் தொழில் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாதுகாப்புத் துறைக்கான சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் இத்துறை வணிகர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி ஆவடியில் நடைபெறுகிறது. 
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், கனரகத் தொழிற்சாலை, டான்ஸ்டியா, ஏஐஇஎம்ஏ, ஐஇஎம்ஏ, கொடீசீயா மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகியன இணைந்து தேசிய அளவிலான வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சி மற்றும் தொழில் கண்காட்சியை ஜனவரி 4, 5 தேதிகளில் நடத்தவுள்ளன.
இதில் பெரிய நிறுவனங்கள் மற்றும் எம்எஸ்எம்இ ஆகிய இரு தரப்பினரும் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவர். எம்எஸ்எம்இ நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியில் ஈடுபாடு செலுத்திவரும் இதர அமைப்புகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
உலோகத் தகடுகளைக் கொண்டு தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்,காஸ்டிங்குகள், ஃபோர்ஜிங் செய்யப்பட்ட பொருள்கள், பிரஸ்ஸிங் செய்யப்பட்ட பொருள்கள், ரசாயனம், வாகன பாகங்கள், கருவிகள், ஆய்வக உதிரி பாகங்கள், கண்ணாடிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மின்னணு மற்றும் மின்சாரப் பொருள்கள் உற்பத்தியாளர்கள், மரப் பொருள்கள், பேட்டரிகள், சூரிய மின்சக்தி, கணினி, கணினி சார்ந்த பொருள்கள், தோல் பொருள்கள், பேக்கிங் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், கைவினைப் பொருள்கள், பெயிண்ட் மற்றும் மசகு எண்ணெய்கள், பேப்பர் பொருள்கள், தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள், உணவு பதப்படுத்துதல், ஆடைகள் தயாரிப்பு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருக்கும்.
இக்கண்காட்சியின்போது பல்வேறு அரசுத் திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு நடைமுறைகள், வர்த்தகர்கள் பதிவுக்கான நடைமுறைகள், பொதுத் துறை நிறுவனங்களின் இறக்குமதி ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குறித்த கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
இதில் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள், தமிழக அரசு, இந்தியன் வங்கி, நபார்டு , டிஐஐசி, என்எஸ்சி, ஐடிபிஐ, ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மாவட்ட தொழில் மையங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சிக்கு வர விரும்பும் வர்த்தக பார்வையாளர்கள் தங்களின் வர்த்தக அறிமுகம், ஆதார், யு.ஏ.எம்.எண் ஆகியவற்றைக் காண்பித்து இலவசமாகப் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com