எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்து வணங்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் மாநில அமைச்சர்கள் க. பாண்டியராஜன், இரா. துரைக்கண்ணு, எம்.பி. கு.பரசுராமன், 
எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்து வணங்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் மாநில அமைச்சர்கள் க. பாண்டியராஜன், இரா. துரைக்கண்ணு, எம்.பி. கு.பரசுராமன், 

ஈழத் தமிழர்களை பாதுகாத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் எம்.ஜி.ஆர்.: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஈழத் தமிழர்களை பாதுகாத்ததில் எம்.ஜி.ஆர். முக்கியப் பங்கு வகித்தார் என்றார் தமிழக ஆளுநரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித்.

ஈழத் தமிழர்களை பாதுகாத்ததில் எம்.ஜி.ஆர். முக்கியப் பங்கு வகித்தார் என்றார் தமிழக ஆளுநரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இதையொட்டி நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:
தனது எண்ணங்களையும், நோக்கங்களையும் செயல்படுத்திய மாமனிதர் எம்.ஜி.ஆர். அவரது உன்னதமான திட்டங்களால் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். 1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களால் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக அமைந்தது. குறிப்பாக, அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் குறிப்பிடத்தக்கது.
அவருடைய சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமல்லாமல், இன்றளவும் பள்ளிக் கல்வியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைத்ததற்காக எம்.ஜி.ஆரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு 30 முதல் 40 ஏக்கர் நிலம் தேவை என பரிந்துரை செய்தது. ஆனால், 1,000 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர். ஒதுக்கீடு செய்தார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
இதேபோல், நாட்டிலேயே முதல் முறையாக மகளிருக்கென தனிப் பல்கலைக்கழகத்தைக் கொடைக்கானலில் தொடங்கினார். மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களைப் பாதுகாத்ததில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினார். இந்த நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார் பன்வாரிலால் புரோஹித்.
விழாவுக்குத் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் ஆர். வெங்கடேசன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் கற்கிறேன்
விழாவில் ஆளுநர் பேசியபோது, 'இங்கு அமைச்சர்கள் தமிழில் பேசினர். 
அவர்கள் தமிழில் சரளமாகப் பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஆனால், எனக்குத் தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். என்றாலும், தமிழ்க் கற்று வருகிறேன். நானும் விரைவில் தமிழில் பேசுவேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com