ஜெயலலிதா உடலுக்கு 20 நிமிடங்கள் எம்பாமிங் நடந்தது: மருத்துவர் சுதா சேஷய்யன்

ஜெயலலிதா உடலுக்கு 20 நிமிடங்கள் எம்பாமிங் நடந்தது என்று மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். 
ஜெயலலிதா உடலுக்கு 20 நிமிடங்கள் எம்பாமிங் நடந்தது: மருத்துவர் சுதா சேஷய்யன்

ஜெயலலிதா உடலுக்கு 20 நிமிடங்கள் எம்பாமிங் நடந்தது என்று மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
ஜெயலலிதா உடலுக்கு செய்யப்பட்ட எம்பாமிங் குறித்து ஆணையத்தில் விளக்கமளித்தேன். ஜெயலலிதா மரணமடைந்த இரவில் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு எனக்கு தகவல் அளிக்கப்பட்டது. 20 நிமிடங்களில் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் பணி நிறைவடைந்தது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஒருநாளும் நான் சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து நாளை விசாரணை ஆணையம் முன் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சத்தியபாமா ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com