திருச்சி: ரஜினி மன்ற இணையதளத்தில் ஒரே நாளில் 16,000 பேர் இணைப்பு

நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள ரஜினிமன்ற இணையதளத்தில் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 16 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளன.
திருச்சி: ரஜினி மன்ற இணையதளத்தில் ஒரே நாளில் 16,000 பேர் இணைப்பு

நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள ரஜினிமன்ற இணையதளத்தில் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 16 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளன.

தனிக்கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இணையதளத்தையும், செயலியையும் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ரசிகர்கள் உடனடியாக இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யத் தொடங்கினர். திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை வரை 16 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டுவரை பதிவு செய்யப்பட்டு இயங்கும் 1,550 மன்றங்கள் உள்ளன. இவைத்தவிர பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கான மன்றங்கள் இயங்கி வருகின்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். 

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட மன்ற நிர்வாகி கூறியது: திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாளில் 16 ஆயிரம் ரசிகர்கள் இணைந்துள்ளனர். தனியார் இணையதள மையங்களுக்கு சென்று பதிவு செய்து வருகின்றனர். இவைத்தவிர மாவட்ட தலைமை மன்றத்தின் சார்பில் மடிக்கணினி தயார் செய்து ஒவ்வொரு பகுதியாக இருசக்கர வாகனங்களில் வலம் வந்து ரசிகர்களை பதிவு செய்து வருகிறோம். இதுவரை பதிவு செய்தவர்களில் 534 பேர் திமுக-வில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதேபோல, திருச்சி திமுக-வில் பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் ரஜினி ரசிகர்களாகவே உள்ளனர். அரசியல் கட்சி, சின்னம், கொடி அறிவித்து தேர்தல் பணியை தொடங்கும்போது வந்து இணைவர். என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com