பள்ளியில் டெட்டனேட்டர் வெடித்து மாணவரின் கைவிரல்கள் துண்டிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் டெட்டனேட்டர் வெடித்ததில் மாணவரின் கைவிரல்கள் துண்டாகின. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் டெட்டனேட்டர் வெடித்ததில் மாணவரின் கைவிரல்கள் துண்டாகின. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூரை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சபரீஷ் (8). அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இவர், இறைவணக்கம் முடிந்து வகுப்பறைக்குத் திரும்பினார். அப்போது, வகுப்பறையில் தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த 4-ஆம் வகுப்பு மாணவர் கோகுல்நாத் குப்பையில் இருந்து டெட்டனேட்டர் குச்சியின் ஒரு பகுதியை எடுத்து வைத்திருந்தார். அதை சபரீஷ் கேட்கவே, கோகுல்நாத் தர மறுத்து, வெளியே வீசியெறிந்தார். ஓடிச் சென்று அதை எடுத்து வந்த சபரீஷ், வகுப்பறையின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு, தான் ஏற்கெனவே வைத்திருந்த செல்போன் பேட்டரி, துண்டு வயரைக் கொண்டு டெட்டனேட்டர் குச்சியில் ஆர்வக் கோளாறு காரணமாக இணைப்புக் கொடுத்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் பெரும் சப்தத்துடன் வெடித்தது. இதில் சபரீஷின் வலது கையில் கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டு சிதறி விழுந்தன. வகுப்பறையில் ரத்தம் அதிகளவில் படிந்தது. காயத்தால் அலறிய சபரீஷ் உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலது கையின் எஞ்சியிருந்த கட்டைவிரலும் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வகுப்பறையின் கடைசிப் பகுதியில் இந்த விபத்து நேர்ந்ததால் பிற மாணவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com