அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை வெள்ளிக்கிழமை சந்தித்த மலேசியா நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் டத்தோ பா.கமலநாதன், 
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை வெள்ளிக்கிழமை சந்தித்த மலேசியா நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் டத்தோ பா.கமலநாதன், 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.5) நடைபெற்றது. கருத்தரங்கை தொடக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:-
தமிழகத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிவறை வசதி, குடிநீர், வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை; இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
தனியார் நிறுவனங்கள்- தன்னார்வ அமைப்புகள்: தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு திட்டப் (சிஎஸ்ஆர்) பணிகளை அரசுப் பள்ளிகளில் மேற்கொண்டு அங்குள்ள அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உதவ வேண்டும். நிறுவனங்கள் தங்களது நிதியைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களை நேரடியாக மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளில் அவற்றின் பெயரை பொறித்துக் கொள்ளலாம். 
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:- நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் எஸ்ஆர்எம் குழுமம் ரூ.40 லட்சம் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 20 இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. மாறாக தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் உள்ளனர். அந்த ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். 
மத்திய அரசிடம் ரூ.2,200 கோடி... மத்திய அரசின் சார்பில் அனைவருக்கும் இடை நிலை கல்வித்திட்டம் (ஆர்எம்எஸ்ஏ), அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற திட்டங்களுக்கான மத்திய அரசிடமிருந்து ரூ.2,200 கோடி நிதி கிடைத்தால் பல்வேறு திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். 
பாலிடெக்னிக் பேராசிரியர் தேர்வில், மதிப்பெண் முறைகேடு தொடர்பாக விசாரணைக்குப்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
கற்றலில் குறைபாடுடையவர்களுக்கு பயிற்சி: தமிழகத்தில் 10 சதவீத மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளர். அந்த மாணவர்களுக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் 15 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றார். 
முன்னதாக பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்கள் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் ரெ.இளங்கோவன், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் டி.ஜெகநாதன், தொடக்கக் கல்வி இயக்குநர் அ.கருப்பசாமி, ஆர்எம்எஸ்ஏ இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com