இன்று திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் , மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தேர்தலுக்குத் தயார்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வைப்புத் தொகையைக் கூட வாங்க முடியாமல் திமுக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்களை உத்வேகப்படுத்தும் வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு தயாராகுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட உள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். மாவட்ட வாரியாக ஆளுநர் ஆய்வு செய்து வருவதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆளுநர் உரையைப் புறக்கணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com