பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளி-கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளாக இருந்தாலும் சிறப்பு நிகழ்வாக

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளி-கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளாக இருந்தாலும் சிறப்பு நிகழ்வாக, இந்த விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் தனித்தனியாக புதன்கிழமை வெளியிட்டனர். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொங்கல் பண்டிகையை நமது மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடவும், அதன் மூலமாக தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காத்திடவும், வரும் 12-ஆம் தேதியன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளுக்கு சிறப்பு நிகழ்வாக இந்த விடுமுறை விடப்படுகிறது.
ஐந்து நாள்கள் விடுமுறை: வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நாள்கள் ஐந்தாக அதிகரித்துள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 14) பொங்கல் பண்டிகையும், வரும் 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினமும், வரும் 16-ஆம் தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com