தைப்பொங்கல்: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தைப்பொங்கலை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தைப்பொங்கலை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
பொங்கலன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, கடந்த சில நாள்களாகவே அதிகளவில் பக்தர்கள் இங்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் திருக்கோயிலில் பொங்கலன்று அதிகாலையிலே சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தங்கள் இல்லங்களுக்கு திரும்பி பொங்கலிடுவது வழக்கம். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com