எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு உள்பட 14 சட்ட மசோதாக்கள் நிறைவேறின

எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு உள்பட 14 சட்ட மசோதாக்கள் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன.

எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு உள்பட 14 சட்ட மசோதாக்கள் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
ஊதிய உயர்வு, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனி அலுவலர் நியமனம் போன்ற மசோதாக்களுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
நிகழ் ஆண்டுக்கு ரூ.6,522.03 கோடிக்கு நிதி ஒதுக்கம், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஊதிய உயர்வு, திரைப்படங்களுக்கு 30 சதவீத வரி விதிப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது, வார்டுகளின் எல்லைகளை வரையறை செய்வதற்கான ஆணையம் அமைப்பது, கல்விச் சேவை அளிக்காத அனைத்து நிறுவனங்களையும் சொத்து வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வருவது உள்பட 14 சட்டத் திருத்த மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.
குரல் வாக்கெடுப்பு: சட்டத் திருத்த மசோதாக்களில், எம்.எல்.ஏ.,க்களுக்கான ஊதிய உயர்வு, தனி அலுவலர் நியமனம், வார்டு மறுவரையறை ஆணையம் ஆகியவற்றுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அதேசமயம், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறைக்கு வரவேற்புத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்களையும் மக்களே தேர்ந்தெடுக்க வழி செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com