கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க: ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் சென்னை வருகை

இந்திய கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் கப்பல் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது.
கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்னைத் துறைமுகத்துக்கு வந்த ஜப்பான் நாட்டின் கப்பல் சுகாரு. 
கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்னைத் துறைமுகத்துக்கு வந்த ஜப்பான் நாட்டின் கப்பல் சுகாரு. 

இந்திய கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டின் கப்பல் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது.
இரு நாடுகளின் கடலோரக் காவல் படையினரிடையே உள்ள பல்வேறு திறன்களைப் பரிமாறிக் கொள்ளவும், நல்லெண்ணப் பயணமாகவும் நடத்தப்படும் இக்கூட்டுப் பயிற்சி கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற நிலையில் இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறும் கூட்டுப் பயிற்சிக்காக ஜப்பான் கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை சென்னை வந்துள்ளனர். இக்கூட்டுப் பயிற்சிக்கு 'சாரெக்ஸ்-18' என பெயரிடப்பட்டுள்ளது. 
'சுகாரு' என்ற அதிநவீன ரோந்துக் கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படை கண்காணிப்பாளர் யூஜி யமாமோடோ தலைமையில் வந்த படையினரை இந்தியக் கடலோரக் காவல்படை ஐ.ஜி அலி முத்தாகர் வரவேற்றார். மேலும் வாத்திய இசை மூலம் அவர்களை இந்தியப் படையினர் உற்சாகப்படுத்தினர். மேலும் சென்னைத் துறைமுகம் சார்பில் பட்டாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி ஒரு வாரம் நடைபெற உள்ள கூட்டுப் பயிற்சி நிகழ்ச்சியில் விளையாட்டு, தொழில்நுட்பம், சமுதாய வளர்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இரு நாட்டுப் படையினரும் கூட்டாகப் பங்கேற்க உள்ளனர். இதன் முக்கிய நிகழ்ச்சியாக சென்னைக்கு அருகே நடுக்கடலில் இருநாட்டு கப்பல்கள், வீரர்கள் பங்கேற்கும் ரோந்து பணி குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com