ஜன.16 இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடக்கி வைக்கிறார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 16 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
ஜன.16 இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: முதல்வர் தொடக்கி வைக்கிறார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 16 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இரவு தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாமாங்கம் சேகோ சர்வ் அருகில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். 
அதைத்தொடர்ந்து, மேட்டூர் செல்லும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காலை 10.35 மணிக்கு மேட்டூர் அணை பூங்காவில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதை நினைவுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணை திறந்து வைக்கிறார்.
பின்னர், தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்குச் செல்லும் முதல்வர் , அரசுப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி, அரசு கட்டடங்களுக்கு பூமி பூஜை, பொதுமக்களிடம் குறைகேட்டு மனு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, வெள்ளரிவெள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ஜிம், அம்மா பார்க் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்வார் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகு இரவு சேலம் திரும்புகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) ஓமலூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு சேலம் திரும்பி நெடுஞ்சாலை நகர் வீட்டில் தங்குகிறார். 
திங்கள்கிழமை (ஜன.15) காலை பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்களைப் பெறுகிறார். மேலும், எடப்பாடியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு காரில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மதுரை செல்கிறார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 
அதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கிவைத்துப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து கிளம்பி மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com