ஜல்லிக்கட்டு போராட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டாகும்: விசாரணை ஆணையத் தலைவர்

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டுக்கு மேலாகும் என்று ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டுக்கு மேலாகும் என்று ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக இரண்டாம் கட்டமாக மூன்று நாள்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 996 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட விசாரணையில் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதில் 41 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். மதுரையில் நடைபெற்ற பிரச்னைகள் தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்கும் நோக்கில் பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் மதுரையில் விசாரணையைத் தொடர முடிவு செய்துள்ளோம்.
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்கள் தவிர பிறரிடமும் விசாரணை நடத்தப்படும். போராட்டம் தொடர்பாக முழுவதும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டுக்கு மேலாகும். இன்னும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. தேவைப்பட்டால் காவல்துறை உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com