திருப்பதி கோயில் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை: கனிமொழி எம்பி

திருப்பதி கோயில் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திருப்பதி கோயிலுக்கு எதுக்கு காவல்துறை பாதுகாப்பு என பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கனிமொழி கூறியதாவது, 
திருப்பதி கோயில் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துகளை பார்த்தால் அசாதாரண நிலை இருப்பதாகவே தெரிகிறது. 

நீதிபதிகள் புகார் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com