பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம்

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம்


சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி வழங்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஒருவர் பெயரில் பெட்டிக்கடை வைக்க உரிமம் பெற்றுவிட்டு, அதனை வேறு நபர்களுக்கு விற்று விடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஒரு நபரே ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளை திறப்பதில் இருந்து தடை விதிக்கும் வகையில், பெட்டிக்கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தவும், அவ்வாறு ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை ஒரு மாதத்தில் பரிசீலித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடைகள் வைக்கவும், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் அனுமதி இல்லை என்றும் உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

இதன் மூலம், சென்னையில் சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கு ஆதார் எண் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com