வேலை வாய்ப்பைப் பெற கல்வியுடன் பிற திறமைகளை மேம்படுத்த வேண்டும்

உயர் கல்வி பயிலவிருக்கும் மாணவர்கள் கல்வியுடன் பிற திறமைகளையும் மேம்படுத்திக் கொண்டால்தான் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்று கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஜெயப்பிரகாஷ் காந்தி
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிகரம் தொட கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறார் சொற்பொழிவாளர் ஜெயபிரகாஷ் காந்தி. 
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிகரம் தொட கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறார் சொற்பொழிவாளர் ஜெயபிரகாஷ் காந்தி. 

உயர் கல்வி பயிலவிருக்கும் மாணவர்கள் கல்வியுடன் பிற திறமைகளையும் மேம்படுத்திக் கொண்டால்தான் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்று கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். 
ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பப் படிப்புச் சேர்க்கைக்கும் போட்டித் தேர்வு அவசியம் என்ற நிலை உருவாகி விட்டது. வேலைவாய்ப்புக்கு அதைவிட பன்மடங்கு போட்டியை எதிர்கொள்ளும் திறமை, தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே எந்த துறையில் வளர்ச்சி, வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து அந்த துறையில் தங்களது திறனை மென்மேலும் மேம்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியும்.
பள்ளிகளில் நடத்தப்படும் சீராய்வு, திருப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள், தேர்வில் எழுதாமல் விட்ட கேள்விகளுக்கு வீட்டில் வைத்து ஒரு முறை தேர்வு எழுதி பயிற்சி செய்யுங்கள். அப்போது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதும் திறனை பெற முடியும். 
பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடத் திட்டத்துடன் கூடவே இதர தொழில்நுட்பத் திறமைகளைக் கற்றுத் தரும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பெற முன்பு மனிதர்களுக்கு இடையில் போட்டி, இப்போது மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் உள்ள போட்டியாக மாறி இருக்கிறது. எனவே மாணவர்கள் வெறும் புத்தகப் படிப்பையும், மதிப்பெண்ணையும் தகுதியாக வைத்துக் கொண்டு வேலைவாய்ப்புகளைப் பெற முடியாது. இதர திறமைகளையும், தகுதிகளையும் மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com