இயற்கையை வணங்கினால் வாழ்க்கை செழிக்கும்: பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து

இயற்கையை வணங்கினால் மனித வாழ்க்கை செழிக்கும் என மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இயற்கையை வணங்கினால் மனித வாழ்க்கை செழிக்கும் என மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தை மாதம் பொங்கல் திருநாளில் பூமிக்கு பூஜை போட்டு மண்ணை தோண்டி அந்த பள்ளத்தை அடுப்பாக்கி, அதன் மேல் புதிய மண் பானையை வைத்து அதனுள் அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, மண்பானையில் பால் ஊற்றி பானைக்கு ஒரே சீராக சூடேற்றி, வணங்குகிறோம்.
இந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால், இயற்கையின் இயல்பான தன்மை நிலைக்க வேண்டும். நிலத்தின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். காலத்தே மழை பொழிய வேண்டும். ஆகாயத்தின் ஆற்றல்கள் நமக்கு சகாயமாக அமைய வேண்டும். இத்தகையை நிலைகளில் இருந்து இயற்கை மாறி சீற்றம் அடைந்தால், இயல்பான வாழ்க்கையிலும் மாற்றம் வருகிறது. எதிர்காலம் ஏமாற்றமடைகிறது. எனவே தான் நாம் இயற்கையை வணங்கச் சொல்கிறோம். 
மனிதனும் தன் கடமைகளை உணர்ந்து நன்றாக உழைத்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். உழைப்பு, தாய், தந்தையிடம் அன்பு, பாசம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோடு ஒட்டி வாழும் பண்பு, தர்மம், ஒற்றுமை உணர்வு, ஒழுக்கம் இவை எல்லாம் இன்றைய தேவை. மக்களிடையே அன்பு, பக்தி, பாசம், பண்பு பொங்கி, மன அமைதியும், நிம்மதியும் பெற்று வாழ்ந்திட இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com