காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 7 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும்: முதல்வர் பழனிசாமி 

காவிரியிலிருந்து தமிழக விவசாயத்துக்கு 7 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 7 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும்: முதல்வர் பழனிசாமி 

காவிரியிலிருந்து தமிழக விவசாயத்துக்கு 7 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக முதல்வருக்கு சனிக்கிழமை அவர் அனுப்பிய கடித விவரம்: 
பொங்கல் வாழ்த்து: உங்களுக்கும் (சித்தராமையா) கர்நாடக மக்களுக்கும் என் அன்பான மகர சங்கராந்தி வாழ்த்துகள்.
2007 பிப். 5-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீரை மாதக் கணக்கின் அடிப்படையில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜன. 9-ஆம் தேதி அடிப்படையில் 111.64 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
சாகுபடி பாழ்: இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் சம்பா சாகுபடிக்கு வடகிழக்குப் பருவ மழை ஆரம்பத்தில் உதவியளிக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், பருவ மழையின் தீவிரத்தால் நாற்றுகள் நிலைத்து நிற்க முடியாமல் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்து அழிந்துபோயின. இதனால், விவசாயிகள் மீண்டும் சாகுபடி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவை முதிரும் நிலையில் தற்போது போதுமான நீர் வரத்தில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு போதுமான நீர் தேவைப்படுகிறது.
நீர் இருப்பு நிலவரம்: ஜனவரி 12-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 21.27 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீர் காவிரி டெல்டா விவசாயத்துக்கும், வெயில் காலக் குடிநீர் தேவைக்கும் போதுமானதாக இருக்காது. 
கர்நாடகத்தில் அறுவடைக் காலம் ஏற்கெனவே முடிந்தவிட்ட நிலையில் கர்நாடகத்தின் 4 அணைகளில் ஜனவரி 12-ஆம் தேதி நிலவரத்தின்படி 49.82 டிஎம்சி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 
15 டிஎம்சி நீர்: இந்த இக்கட்டான நேரத்தில் தமிழகத்தின் குடிநீர்த் தேவைக்காகவும், விவசாயப் பாசனத்துக்கும் குறைந்தபட்சம் 15 டிஎம்சி நீரையாவது கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் இந்தச் சாகுபடியையே தங்கள் வாழ்வாதாரத்துக்காக பெரிதும் நம்பியுள்ளதால் முதலில் 7 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு உடனடியாக திறந்துவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள். மீத நீரை 2 வாரங்களில் திறந்து விடவும் ஆவன செய்யுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com