வேலூர் விஐடி பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய நவீன பந்தயக் கார்!

ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 கி.மீ. ஓடும் வகையில் "ஈ.டி. 18' என்ற நவீன பந்தய வாகனத்தை வேலூர் விஐடி பல்கலைக்கழக பி.டெக்., மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். 
வேலூர் விஐடி பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய நவீன பந்தயக் கார்!

ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 கி.மீ. ஓடும் வகையில் "ஈ.டி. 18' என்ற நவீன பந்தய வாகனத்தை வேலூர் விஐடி பல்கலைக்கழக பி.டெக்., மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். 
இது குறித்து விஐடி பல்கலைக்கழகத்தின் "ஈகோ டைட்டன்ஸ்' குழுவில் இடம் பெற்றிருந்த பி.டெக்., மாணவர்கள் சுபாங் கரே, சித்தார்த் பத்மநாபன் உள்ளிட்டோர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
முன்புறம் இரண்டு சக்கரங்களுடனும், பின்புறம் ஒரு சக்கரத்துடனும் உள்ள இதன் பெயர் "ஈ.டி.18'. எரிபொருளை சிக்கனப்படுத்த இ.எஃப்.ஐ. (ங்ப்ங்ஸ்ரீற்ழ்ர்ய்ண்ஸ்ரீ ச்ன்ங்ப் ண்ய்த்ங்ஸ்ரீற்ண்ர்ய்) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இதை இயக்க 2 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் மொத்த எடை 56 கிலோ. என்ஜின் 50 சிசி திறன் கொண்டது. அதிகபட்சம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
ஐந்து மாதங்களாகப் பணியாற்றி ரூ.15 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட "ஈ.டி.18' வாகனம் சிங்கப்பூரில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஷெல் ஈகோ மாரத்தான் போட்டியில் கலந்து கொள்கிறது. 
அந்த ரேஸ் 11 சுற்றுகள் கொண்டது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு வாகனத்தில் 250 மி.லி. பெட்ரோல் மட்டுமே நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஒரு லிட்டருக்கு சுமார் 200 கி.மீ. தொலைவுக்கு இதை இயக்க முடியும். "ஈ.டி.18' வாகனத்தை மொத்தம் 10 பேர் இணைந்து வடிவமைத்தோம். 

நவீன பந்தயக் காரை அறிமுகப்படுத்திய வி.ஐ.டி. பல்கலைக்கழக பி.டெக். மாணவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com