குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: பிரதமருக்கு ஜெ.அன்பழகன் கடிதம்

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விவரம்: குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் எனத் தெரிந்தும் டிஜிபி ராஜேந்திரனுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது சட்ட விரோதமானது. குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீதும் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், டிஜிபி ராஜேந்திரனை உடனடியாக அந்தப் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
பிரதமரின் முதன்மைச்செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், தமிழக ஆளுநர், மத்திய பணியாளர் துறை செயலாளர், மத்தியப் புலனாய்வுத் துறை ஆணையர், சிபிஐ இயக்குநர் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com