தனிக் கட்சி தொடங்குவது குறித்து இன்று முடிவு: டி.டி.வி. தினகரன்

தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக எம்ஜிஆர் பிறந்த நாளில் (ஜன.17) முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தனிக் கட்சி தொடங்குவது குறித்து இன்று முடிவு: டி.டி.வி. தினகரன்

தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக எம்ஜிஆர் பிறந்த நாளில் (ஜன.17) முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி, பொங்கல் விழா கொண்டாடிய அவர் செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு சேலம் சென்றார்.
முன்னதாக, ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்து, தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசுதான் பெற்றுத்தர வேண்டும்.
இந்த விஷயத்தில், மத்திய அரசு தலையிட்டு விரைவில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தர வேண்டும். காவிரி நீரை மத்திய அரசால் மட்டுமே பெற்றுத் தர முடியும். தமிழக அரசால் கேட்கத் தான் முடியும், இதில், அவர்களை குறை கூற முடியாது.
பாசனத்துக்குரிய நீரை சேமித்து வைத்து இருப்பதாக, ஆளுநர் உரையில் பொய் சொல்லி உள்ளனர். காவிரி கடைமடை பகுதியில் பயிர்கள் வாடி வருவதால், காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர தீவிரம் காட்ட வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு விரைவில் வரும். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது. தனிக் கட்சி தொடங்குவது குறித்து இரண்டு நாள்களில் தெரிய வரும். இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அதிமுகவின் சட்ட திட்டத்தின்படி, பெரும்பான்மையான தொண்டர்கள் ஆதரவு யாருக்கு? எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியது. ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்தை அவர்கள் பிரதிபலித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதுவரை, கட்சி பெயரில்லாமல் செயல்பட முடியாது. அடுத்து என்ன செய்வதென்று, எம்ஜிஆர் பிறந்த நாளில் முடிவு செய்வோம்.
ஆர்.கே. நகர் போல, தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் அணி வெற்றிபெறும். இந்த ஆட்சி இரண்டு மாத காலத்தில் முடிவுக்கு வரும் என்றார் தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com