தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி மாநாடு இன்று தொடக்கம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கல்வி மாநாடு ('திங்க் எடியூ') சென்னையில் புதன்கிழமை தொடங்க உள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்வி மாநாடு இன்று தொடக்கம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கல்வி மாநாடு ('திங்க் எடியூ') சென்னையில் புதன்கிழமை தொடங்க உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் புதன்கிழமை வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் இந்தக் கல்வி மாநாடு நடைபெற உள்ளது. 
முதல் நாளான புதன்கிழமை காலை 11 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் வரவேற்புரையாற்ற உள்ளார். 
தொடக்க விழாவைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளின் கீழ் கல்வியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தகவல்தொழில்நுட்பம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளனர்.
தமிழ் மொழி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பாண்டியராஜன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், உயர் கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவால், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்று 
உரையாற்ற உள்ளனர். 
இரண்டாம் நாளன்று... மாநாட்டின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன. தொடக்க நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டிசிஎஸ் நிறுவன சர்வதேச தலைவர் வெங்குசாமி ராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினரும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான சுகதா போஸ், பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன், மாதா அமிர்தானந்த மயி மடத்தின் துணைத் தலைவர் சுவாமி அமிர்தஸ்வரூபானந்த பூரி, திரைப்பட இயக்குநர் மதுர் பந்தர்கர், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், நடிகர் அரவிந்த் சாமி, இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com