வெளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கோடைகால பயிற்சி: சென்னை ஐஐடி அறிவிப்பு

வெளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய கோடைகால பயிற்சியை சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

வெளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய கோடைகால பயிற்சியை சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு:
பொறியியல், மேலாண்மை மற்றும் அறிவியல் துறைகளில் சேர்ந்து படித்து வரும் இளம் மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இரண்டு மாத கால கோடைகால பயிற்சி வகுப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், வேதி பொறியியல், கட்டடவியல் பொறியியல், கணினி பொறியியல், பொறியியல் வடிவமைப்பு, செயல்முறை இயந்திரவியல், மின் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், கடல்சார் பொறியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், மேலாண்மை கல்வி உள்ளிட்ட துறைகளின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஐஐடி இல்லாத வெளி கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்). மூன்றாம் ஆண்டு மாணவர்களும், , எம்.இ., எம்.டெக். முதலாமாண்டு மாணவர்களும் இந்தப் பயிற்சியில் சேர முடியும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 28 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு https://stp.iitm.ac.in/howtoapply  என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com