தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க தனி இயக்கம்: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உறுதி

நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுôக்க தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பது அவசியமாகும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கல்வி சார் கருத்தரங்க மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து மலரை வெளியிடும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கல்வி சார் கருத்தரங்க மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து மலரை வெளியிடும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுôக்க தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பது அவசியமாகும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். மேலும், இதனை ஒரு தனி இயக்கமாக எடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் கல்வி சார் கருத்தரங்கம், சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியது:-
பண்டைய காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலை பெற்ற நாடாக விளங்கியது. உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நான்கில் ஒரு பங்கை இந்தியா உற்பத்தி செய்தது. ஆனால், அதன் பிறகு காலனி ஆதிக்கம், நோய் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியா பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், இன்றைக்கு இந்தியா மீண்டும் தனது பழைய நிலையை அடைந்து வருகிறது. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து, உலக அளவில் பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடு என்ற நிலையை எட்டி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தபோதும்கூட, இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இதை உலக வங்கி, ஏடிபி போன்ற அமைப்புகளின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாததற்கு மிக முக்கியக் காரணம், கூட்டுக் குடும்ப முறை போன்ற நமது பாரம்பரியம்தான். எனவே, இன்றைய தேவை நமது பாரம்பரியம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை பாதுகாப்பது மட்டுமே.
கல்வி அறிவு: இந்தியா வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய கல்வி அறிவு அவசியம். ஆனால், அதைவிட நல்ல மனிதவளமும், வளர்ச்சிக்கான வியூகம் வகுப்பதும் மிக அவசியம். திறன், நல்ல மனோபாவம் இல்லாத கல்வி, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது. இந்த நல்ல மனோபாவத்தை இளைஞர்களிடையே உருவாக்க, நாட்டின் வரலாற்றையும், கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவு கூருவது மிக அவசியம். 
நான் மாணவனாக இருந்த போது, நன்னெறி அறிவியல் என்ற பாடம் இருந்தது. ஆனால், இன்று அறிவியல் பாடம் மட்டுமே இருக்கிறது. நன்னெறி காணாமல் போய் விட்டது. விளையாட்டு வகுப்பு அன்று கட்டாயம். இன்று அதுவும் இல்லாமல் போய்விட்டது. தோட்டக்கலை பயிற்சி வகுப்பு அன்று நடத்தப்பட்டது. இன்று மரம் நடுவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இவை அனைத்தும் நமது கல்வி முறையில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.
தாய்மொழிக் கல்வி: நாம் ஒவ்வொருவரும் தாய் மொழியில் கல்வி கற்பது மிக அவசியம். அப்போதுதான், நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நாம் உணர்வுப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள முடியும். தாய்மொழி கண் போன்றது. பிற மொழிகள் அனைத்தும் கண் கண்ணாடி போன்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
எனவே, நமது பாரம்பரியம், கலாசாரத்தைப் பாதுகாக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிப்பது அவசியம். இந்தக் கருத்தை நாடு முழுவதும் ஒரு இயக்கமாகக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறேன் என்றார் அவர்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார்: நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியமான, 'தமிழகத்தை பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாக்க வேண்டும்' என்ற இலக்கை எட்ட தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது என்றார்.
முன்னதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியர் பிரபு சாவ்லா வரவேற்புரையாற்றினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா நிறைவுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com