ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது சொந்தக் கருத்தல்ல: உயர் நீதிமன்றம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது சொந்தக் கருத்தல்ல: உயர் நீதிமன்றம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்தல்ல என்று சென்னை உயர் நீதமன்ற நீதிபதி கருத்துக் கூறியுள்ளார்.


சென்னை: ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்தல்ல என்று சென்னை உயர் நீதமன்ற நீதிபதி கருத்துக் கூறியுள்ளார்.

மன்னிப்புக் கேட்ட பிறகும், ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையை எதிர்த்து சென்னை கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் தொடரப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யக் கோரி வைரமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, வருத்தம் தெரிவித்த பிறகும், விஎச்பி மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றன என்று வைரமுத்து சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

வைரமுத்து தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, மகளிருக்கு அதிகாரம் அளிக்கப் போராடியவர் ஆண்டாள் என்றே வைரமுத்து எழுதியுள்ளார். ஆண்டாள் குறித்த கட்டுரையில் வைரமுத்து கூறியிருக்கும் கருத்தில் தவறில்லை. ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள்தான் காட்டியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்து இல்லை என்றும் நீதிபதி ரமேஷ் கருத்துக் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது. 

ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து மீது சென்னை கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com