மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

மாணவர்களின் படைப்பாற்றலை பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய ஜவுளி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. 
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. 

மாணவர்களின் படைப்பாற்றலை பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய ஜவுளி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் 'நமது கல்வி முறை மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறதா?' என்ற தலைப்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியது:
மக்கள் பயன்பெறும் வகையில் அறிவியல், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
படிப்பைத் தாண்டி, மாணவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றல் திறனை பெற்றோரும், கல்வி நிலையங்களும் ஊக்குவிக்க வேண்டும். 
குழந்தைகளின் சிந்தனைக்கும், கருத்துக்கும் முழு சுதந்திரம் அளிக்கும்போதுதான், அவர்களின் படைப்பாற்றல் திறன் தானாக வளரும். 
படைப்புகள் கலாசாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும்:
ஒவ்வொரு படைப்பும் அது சார்ந்த கலாசாரம், புதிய சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், அனைத்து தரப்பு மக்களையும் இணைக்கும் விதமாகவும் இருக்க வேண்டும். 
நமது பாரம்பரியமான கைத்தறித் துறையில் பணியாற்ற இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. 
ஆனால், நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் துணிகளை விட, பாரம்பரிய கைத்தறி முறையில் தயாரிக்கப்படும் துணிகளுக்கு சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. 
அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளையும் வரவேற்க வேண்டும் என்றார். இக்கருத்தரங்கில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவு இயக்குநர் பிரபு சாவ்லா, மதூர் பந்தர்கர், வடிவமைப்பாளர் ராஜீவ் சேதி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட கட்சி அல்ல: கனிமொழி
திமுக கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார். 
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி சார் கருத்தரங்கில் கனிமொழி கலந்து கொண்டார். 
அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில்:
திமுக கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட கட்சி அல்ல. கடவுள் ஒருவரே என்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், எங்கள் கட்சியில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் உள்ளனர். அதேபோல், இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியில் உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com